நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழுவிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். 11 பேரை கொண்ட இந்த தெரிவுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, இரா. சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரே எதிர்க்கட்சி சார்பில் அங்கம் வகிக்கின்றனர்.
எதிர்வரும் டிசெம்பர் 8ஆம் திகதி வரவு செலவு திட்ட விவாதம் நிறைவடைந்ததிலிருந்து ஒரு மாதத்திற்கு தெரிவுக்குழுவின் அமர்வுகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை கடிதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு டிசெம்பர் 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தெரிவுக்குழுவினால் மாத்திரமே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
தனக்கு எதிராக குற்றங்களுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஏற்கனவே பதில்களை தாக்கல் செய்துள்ளார். தேவையேற்படின் தெரிவுக்குழுவிற்கு குற்றங்கள் தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply