மன்னாரில் வீடுகள் பகிரப்பட்டதில் பாரிய முறைக்கேடுகள்
இந்திய அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் மன்னாரில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் பகிரப்பட்டதில் அமைச்சர்களின் தலையீகளால் அங்கு பாரிய முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இங்கு இனரீதியிலான சம பங்கீடு இல்லாது செய்யப்பட்டிருப்பதாக த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
வன்னியில் அபிவிருத்திக்கென தெரிவு செய்யப்பட்ட 42 பாடசாலைகளில் 29 சிங்கள பாடசாலைகளும் 11 முஸ்லிம் பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் பாடசாலைகளில் இரு பாடசாலைகள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருப்பது தான் சம அளவிலான பங்கீட்டு தன்மையா என்று கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே செல்வம் எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இனப்பிரச்சினை எந்தளவில் தாங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றதோ அந்தளில் மதப்பிரச்சினையும் ஓங்கி இருக்கின்றது. இனங்களுக்கு இடையில் மதப்பிரச்சினை தூண்டிவிடப்படுகின்றது.
வன்னியை பொறுத்த வரையில் அங்கு 15 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் 20 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களும் பள்ளிவாசல்களும் அழிக்கபட்டிருக்கின்றன. இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை மூட்டி விடவேண்டுமானால் மதப்பிரச்சினை தூண்டப்பட்டால் போதுமென்ற நிலை உருவாகியுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply