நீதித்துறை – நாடாளுமன்றத்திற்கு இடையிலான மோதல் உக்கிரம்
இலங்கையில் அரசுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்து வருகிறது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரச தரப்புக்கு ஆதரவாகவும், நீதித்துறையில் அரசின் தலையீட்டை எதிர்த்து தலைமை நீதிபதிக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் (4.12.12) கொழும்பில் நடைபெற்றன.
தம் மீதான குற்றச்சாட்டை விசாரித்து வரும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன்னர் தலைமை நீதிபதி இரண்டாவது முறையாக நேற்று ஆஜரானார். அடுத்த விசாரணை இம்மாதம் நாளை மறுதினம்(6.12.12) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று கூறி, அவர் மீது அரச தரப்பு 14 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது
தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும், நிதி முறைகேடுகள் எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் தனது வழக்கறிஞர்கள் மூலம் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால்இ அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவினர் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை ஷிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் தான் பதவி விலகப் போவதில்லை என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை சுயாதீனமான தீர்ப்புகளை வழங்கி வருவதற்காக அரச தரப்பால் இலக்கு வைக்கப்படுகிறது என்று, தலைமை நீதிபதியின் ஆதரவாளரும், அரசியல் சாசன வழக்கறிஞருமான ஜெ சி வெலியாமுன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் அனைத்து அமைப்புகளிலும். இதுவரை நீதித்துறை மட்டுமே சுயாதீனமான அமைப்பாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டும் அவர். அதன் காரணமாகவே இவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் கூறுகிறார்.
எனினும் உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக. அரசுக்கு ஆதரவானவர்கள். தலைமை நீதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு நாட்டின் மன்னரைப் போல பலம் வாய்ந்தவர் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் இரு தூண்களாக இருக்கும் நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply