56 அகதிகளின் கோரிக்கையை ஏற்றது அவுஸ்திரேலிய அரசு
புகலிடம் கோரிய 56 இலங்கை அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. நாடு கடத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 56 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அகதிகளின் கோரிக்கையை ஆராய்வதாக அவுஸ்திரேலிய அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அகதிகள் சார்பான வழக்கறிஞர் இயன் ரின்டோல் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண விதிப்படி விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால் தங்களை நாடு கடத்தக்கூடாதென 56 அகதிகளும் அவுஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply