உலகின் அதிக வயதுடைய பெண்மணி மரணம்
உலகின் அதிக வயதுடைய பெண்மணியான பெஸி கூப்பர் தனது 116 வயதில் உயிரிழந்துள்ளார். ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (04) மாலை உயிரிழந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். பிரேஸிலைச் சேர்ந்த இவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தத்தில் கடந்த வருடம் உலகின் அதிக வயதுடைய பெண்மணியாக பதிவு செய்யப்பட்டார். இவர் 1896 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் திகதி பிறந்ததாக அவரின் பிறப்புச் சான்றிதழ் தெரிவிக்கின்றது.
ஏற்கெனவே உலகின் அதிக வயதான நபராக அறிவிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ரூடிளி பெஸி கூப்பரைவிட இவர் 48 நாட்கள் மூத்தவர் என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. பெஸி கூப்பர் அதே வருடம் ஓகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்தவராவார். மரியா கோம்ஸ் வலன்டிம் 1896 ஆம் ஆண்டு பிறந்தமைக்கும் 1913 ஆம் ஆண்டு திருமணம் செய்தமைக்கும் 1916 ஆம் ஆண்டு தனது முதலாவது மகனை பெற்றதையும் ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதுமையியல் துறை ஆய்வாளரான பிரேஸிலை சேர்ந்த பேராசிரியர் ஒருவரும் மரியா வலன்டிம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அவரின் வயதை உறுதிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலின் மினாஸ் ஜேராய் மாநிலத்தைச் சேர்ந்த ரூடிளி மரையா வலன்டிம் 1946 ஆம் ஆண்டு கணவனை இழந்தார். அதன் பின் அவர் சக்கர நாற்காலியிலே தமது காலத்தை செலவிட்டு வருகின்றார்.
மிகச் சிறந்த உணவுப் பழக்கமே அவரது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் கூறுகிறார். இது மாத்திரமின்றி வைன் குடிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply