தமிழக முதல்வரின் கடிதம் எழுதும் படலம் தொடர்கிறது: மீனவர் விடுதலை?
தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், புதுச்சேரியில் காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்கள் 5 மீன்பிடி படகுகளில் கடந்த 2ம் திகதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்களை இலங்கை கடற்படையினர் புல்மோடை அருகே கைது செய்துள்ளது. இவர்களை 10ம் திகதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இதுபோன்று இந்திய – இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனால், இந்திய மீனவர்கள் பாதுகாப்பாற்ற நிலையை உணர்கின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தால், இந்திய கடலோரக் காவல்படை அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவிடுகிறது. இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் 40 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
எனவே, இலங்கை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக இந்த 40 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply