ஆஸி. வெளியுறவுத்துறை அமைச்சர் – பீரிஸ் இன்று சந்திப்பு

இலங்கைக்கான  மூன்றுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள அவுஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பொப் கார்ர் இன்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிசை சந்திக்கவுள்ளார். சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இருதரப்புக்கும் இடையில் விரிவான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் அவுஸ்திரேலிய அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.
நேற்று மாலை இலங்கை வந்த அமைச்சர் பொப் கார்ர், வர்த்தக உடன்படிக்கை, சுற்றுலா கைத்தொழில் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் கட்டுப்பாடு போன்றவை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.

இலங்கை கடல்எல்லையில் இருந்து சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானவரகள் தமது நாட்டுக்கு உட்பிரவேசிக்கின்றமை தொடர்பில் இலங்கையில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் போது அவர் முக்கியமாக கவனம் செலுத்தவுள்ளார்.

இதன்பொருட்டு, ஒன்றிணைந்த செயற்பாட்டு குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கும் முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply