ஈழ மாணவ, இளைஞர்களது பாதுகாப்பிற்கு இந்தியா நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை, கோயம்பேடு, விஜய் பார்க் விடுதியில் நடைபெற்றது.  ஈழத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த நவம்பர் 26இல் மாவீரர் நாள் கொண்டாடியதால் சிங்கள படையினர் அம்மாணவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியதுடன் அவர்களை கொடூரமான வதைகளுக்குட்படுத்தியும் வருகிறது.  

இந்நிலையில், இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஈழ மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களை அப்பகுதிகளிலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply