பஹ்ரெய்னில் இலங்கை தூதரகம் அமைப்பதற்கு நடவடிக்கை

பஹ்ரெய்னில் இலங்கை தூதரகம் ஒன்றை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதத்தில் முழு அளவில் இயங்கக் கூடிய ஓர் தூதரகமொன்றை பஹ்ரெய்னில் திறக்க உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பஹ்ரெய்னில் சுமார் 20,000 இலங்கையர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தூதரகம் ஒன்றை அமைப்பதன் மூலம் பஹ்ரெய்னில் வாழும் இலங்கையர்கள் கூடுதல் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குவைத்திற்கான இலங்கைத் தூதுவரான முதியன்சலாகே விஜேரட்ன, பஹ்ரெனுக்கான தூதுவர் பதவியையும் தற்போதைக்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply