முன்னாள் போராளிகளின் பிரச்சினை குறித்து முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளிற்கு, அவ் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெறாது சமூகத்தில் இருப்பவர்களினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு ஆணையாளர் உப அலுவலகங்களில் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அவ் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிற்கு, ஏனைய முன்னாள் போராளிகள் தொந்தரவு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்விடயம் குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தர்சன கெட்டி ஆராச்சியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முன்னாள் போராளிகள் பிரச்சினைகளை எதிர்கொள்வார்களாயின் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகங்களில் முறையிடுமாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply