தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் குறைந்து விட்டது
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 2012ல் இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர்கள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் தமிழக அரசின் கண்டனத்தை அடுத்து இலங்கை கடற்படை தாக்குதல் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டவிரோதமாக வெட்டியெடுத்த ரூ.4 ஆயிரம் கோடி கிரனைட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஜெயலலிதா, கிரானைட் முறைகேடு தொடர்பாக ரூ.9,783 கோடி சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் நிலஅபகரிப்பு தொடர்பாக 1,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெயலலிதா, ரூ.835.94 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
சூரியஒளி மின்உற்பத்தியை மக்கள் இயக்கமாக செயல்படுத்த ஆட்சியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply