பாரதவின் மனைவி,மகள்,பிரதி சொலிசிட்டரை சந்தித்தனர் – சி.ஐ.டி

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனின் கொலைத்தொடர்பில் தமது அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்காக அவரது மனைவியும் மகளும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மதவ தென்னக்கோனை சந்தித்ததாக குற்றப்புலனாய்வு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவானிடம் தெரிவித்தனர். இந்த கொலைத்தொடர்பிலான வழக்கு விசாரணை கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பாரத லக்ஷ்மன் மற்றும் வேறு நான்கு பேர்களின் கொலைத்தொடர்பிலான சுருக்க முறையற்ற விசாரணையின்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷிராணி அபயசேகர நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சகல தரப்பினதும் அபிப்பிராயங்களையும் ஆராய்ந்ததன் பின்னர் தனது அபிப்பிராயத்தை தெரிவிப்பார் என்றும் மேலதிகமாக எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றையும் எடுப்பார் என்றும் ஷிராணி அபயசேகர தெரிவித்தார்.

இதனையடுத்தே மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply