இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 7 பேர் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 23ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் தவதீபன், காண்டீபன், செல்வராஜ் உள்பட 6 பேரின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானது. இதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து அங்கும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையை முகாமில் இருந்த பரமேஸ்வரன் ராசுதீன் உள்பட மேலும் 5 பேர் தங்களையும் திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த ரமேஷ், காந்தி மோகன், கஜன் ஆகியோரின் உடல்நிலை நேற்று மாலை சோர்வடைந்தது.
அவர்கள் 3 பேரையும் செங்கல்பட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கும் சாப்பிட மறுத்து போராட்டத்தை தொடங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை இலங்கை நாதன், மயூரன், சுதர்சன், ஸ்ரீசாந்தன் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அகதிகளின் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதுவரை மொத்தம் 16 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 9 பேர் வைத்தியசாலையிலும் 7 பேர் முகாமில் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply