யாழ். தனியார் பஸ்கள் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு
யாழ். மாவட்டத்தில் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று (31) தொடக்கம் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பருத்தித்துறை ஆகிய தனியார் பஸ்களுக்கு இடையில் நேற்று (30) முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது அச்சுவேலி பஸ் நடத்துனர் சின்னையா பார்த்தீபன் (வயது 28) என்பவர் மீது போத்தல் உடைத்து வயிற்று பகுதியில் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இனிவரும் காலங்களில் இவ்வாறன மோதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியே தாம் இன்று தொடக்கம் காலவரையின்றிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில மாதங்களாகவே அச்சுவேலி சங்கத்துக்கும் பருத்தித்துறை சங்கத்துக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அது கைகலப்பு வரை சென்றுள்ளன.
கடந்த வாரம் அச்சுவேலி சங்க தலைவர் கடமையில் இருந்த போது பருத்தித்துறை பஸ் சாரதி ஒருவர் அவரை தாக்கியுள்ளார். நேற்றைய தினமும் முரண்பட்டு பருத்தித்துறை பஸ் நடத்துனர் ஒருவர் அச்சுவேலி பஸ் நடத்துனர் ஒருவருக்கு போத்தல் உடைத்து வயிற்றில் குத்தியுள்ளார்.
இந்த முரண்பாடுகள் தொடர்பாக யாழ் அரச அதிபருக்கும், உரியவர்களுக்கும் முன்னரும் தெரியப்படுத்தி எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே தொடர்ந்தும் இந்த முரண்பாடுகள் நீடிக்குமாயின் நாம் எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாது போகும். எனவே தான் இன்று முதல் இந்த முரண்பாடுகளுக்கு ஒரு உரியவர்களால் ஒரு தீர்வு பெற்று தரும் வரை நாம் காலவரையின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply