ஐக்கிய தேசியக் கட்சியின் வருடத்திற்கான முதலாவது கூட்டம் இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் 2013ஆம் ஆண்டிற்கான முதலாவது செயற்சங்க கூட்டம் இன்று (21) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணியளவில் இக் கூட்டம் கட்சியின் தலைமைச் செயலகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் தெரிவு செய்யத் தவறிய உறுப்பினர்கள் இந்த வருடம் கட்சி பொறுப்புக்களிற்காக தெரிவு செய்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை கட்சி அபிவிருத்தியை துரிதப்படுத்த மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அக்கட்சியின் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்தும் இன்றை கூட்டத்தில் பேசப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply