துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: மினுவாங்கொடையில் சம்பவம்
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 5.30 மணியளவில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, மினுவாங்கொடை நகர் பகுதியில் இரு மாணவர்கள் மேலதிக வகுப்புகள் தொடர்பான சுவரொட்களை ஒட்டிக்கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் குறித்த இரு மாணவர்களையும் தாக்கி தங்கச் சங்கிலிகளை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது குறித்த இருகுழுக்கள் இடையே மோதல் ஏற்பட முச்சக்கர வண்டியில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply