சிரியாவில் 65 இளைஞர்கள் தலையில் சுட்டு படுகொலை
சிரியாவில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிரியாவின் வர்த்தக நகரமான அலெப்போவில் 65 இளைஞர்கள் நெற்றி மற்றும் தோள்பட்டையில் சுடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட கிடந்தனர்.
கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள அந்த இளைஞர்களின் உடல்கள் அங்குள்ள குவெய்க் ஆற்றுப்பகுதியில் கிடந்துள்ளன. இந்த ஆற்றில் மேலும் சடலங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன என்று போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பஸ்தான் அல் காசர் மாவட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்களை, போராளிகள் கடத்தி வந்து சுட்டுக்கொன்றுள்ளனர் என்று அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அப்பகுதிகளில் இது போன்று சுட்டுக்கொல்லப்பட்ட சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறிவருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply