தலிபான் தற்கொலைப்படை தலைவர் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கந்தகார் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெய்வண்ட் மாவட்டத்தில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது அப்துல் பகி என்ற தலிபான் தீவிரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.ருஜி என்ற பெயராலும் அறியப்பட்ட இவன், கந்தகார், உருஸ்கன், ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் இயங்கி வரும் தலிபான் தற்கொலை படைகளின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பன்னாட்டு பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்த தலிபான் தற்கொலை படையினரை  ஏவியவன் அப்துல் பகி என ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply