பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் ஊழல் புகாரை விசாரிக்க சுவிஸ் அரசு மறுப்பு

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் இருந்தது. இதை முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இது போன்று ஆயிரக்கணக்கான ஊழல் புகார்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் பதவி விலகி 2 ஆண்டுகள் கழித்து இப்புகாரை நீக்கியது தவறு.எனவே, இவற்றை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அதிபர் சர்தாரியின் ஊழல் பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் முதலீடு செய்தது குறித்து அந்நாட்டு அரசிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும் என பிரதமருக்கும் உத்தரவிட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் யூசுப் ரசாகிலானி மறுத்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவரை தொடர்ந்து ராஜாபர்வேஷ் அஷரப் பிரதமரானார். பிரதமர் அஷரபிடமும் அதே கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியது. அதற்கு பதில் அளித்த அவர் சுவிட்சர்லாந்து அரசிடம் இருந்து பணம் முதலீடு குறித்த விவகாரங்களை கேட்டு பெறுவதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி சுவிட்சர்லாந்து அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது. ஆனால், சர்தாரி மீதான ஊழல் பண விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை தர முடியாது என சுவிட்சர்லாந்து மறுத்துவிட்டது. சர்வதேச சட்டப்படி அதிபர் பதவியில் இருப்பவர் மீது ஊழல் விசாரணை நடத்த முடியாது. இது போன்ற விசாரணையில் இருந்து அவர் விதிவிலக்கு பெற்றுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு விசாரணை நடத்தி அறிக்கை தருகிறோம் என கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த தகவலை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சட்ட நிபுணர் குழு உறுப்பினர் பவாத்சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசு மற்றும் நீதித்துறை இடையே மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply