இன்று காலை காலியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் வீழ்ந்து சிதறிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்ததையடுத்து நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காலி பிரதேச பிரதம பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக புலன் விசாரணை நடாத்துமாறும், பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply