கூடங்குளத்தில் அணுக் கசிவு இல்லை: இந்திய தூதரகம்
கூடங்குளத்தில் அணுக்கசிவு இல்லை என்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.கூடங்குளத்தில் அணுக்கசிவு ஏற்பட்டதாக இலங்கையில் தகவல் வெளியானது. இந்நிலையில், அணுக்கசிவு ஏற்படவில்லை என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கூடங்குளத்தில் அணுக் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை. திட்டமிட்டபடி, பல்வேறு சோதனை முறைகள் நடைபெற்று வருகின்றன.அணு உலை செயல்படுவதற்கு, அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தில் (ஏஈஆர்பி) ஒவ்வொரு படிநிலையாக ஒப்புதல் பெறப்படுகிறது. அணு உலை பாதுகாப்பாகவே உள்ளது.இந்திய அரசின் பிரதிநிதிகள் விரைவில் இலங்கை வரவுள்ளனர். அப்போது, கூடங்குளம் உள்பட பிற துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply