சமூகத்தில் வேறுபாடுகளை தோற்றுவிப்பதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை : ஜாதிக ஹெல உறுமய

முஸ்லிம்களுக்கு வேறாகவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறாகவும் பொருட்களை தயாரிக்குமாறு கோருவது நடைமுறைக்கு எந்தவகையிலும் ஒத்துவராது. சமூகத்தில் இவ்வாறான வேறுபாடுகளை தோற்றுவிப்பதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.உலமா சபையின் ஹலால் சான்றிதழ் தொடர்பான நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுக்கான உற்பத்திகளுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழும் முஸ்லிமல்லாதோருக்கு ஹலால் சான்றிதழ் அவசியமில்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் எடுத்துள்ள தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

இந்த நிலைப்பாடு உலமா சபையின் ஹலால் சான்றிதழ் தொடர்பான செயற்பாட்டு விதிகளுக்கே முரணானதாகும். ஹலால் சான்றிதழ் தொடர்பான வழிகாட்டி கையேட்டில் ஹலால் உற்பத்திப் பொருட்களோடு இணைந்ததாக ஹலால் அற்ற பொருட்கள் தயாரிக்கப்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் தயாரிக்கப்படும் அதே உபகரணங்களைப் பயன்படுத்தியோ அல்லது அதே மூலப் பொருட்களைப் பயன்படுத்தியோ ஹலால் பொருட்களைத் தயாரிக்க முடியாது. அனைத்து செயற்பாடுகளும் வௌ;வேறாக இருக்க வேண்டும்.

ஒரு தொழிற்சாலையில் ஹலால் அற்ற பொருட்களைத் தயாரிப்பதுடன் சம்பந்தப்படும் ஒருவர் ஹலால் பொருட்களைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட முடியாது. அத்துடன் இரு உற்பத்திகளும் வௌ;வேறு நிறங்களைக் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்பன உலமா சபையின் விதிமுறைகளாகும்.

இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு வேறாகவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறாகவும் பொருட்களை தயாரிக்குமாறு கோருவது நடைமுறைக்கு எந்தவகையிலும் ஒத்துவராது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply