இன்று கச்சதீவு அந்தோணியார் திருவிழா ஆரம்பம்: 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
இலங்கையின் வடகடலில் அமைந்துள்ள
உற்சவத்தில் சுமார் 10 ஆயிரம் வரையிலான பக்தர்கள் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவிலிருந்தும், இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்திருந்தனர். இந்தியாவிலிருந்கு சுமார் பத்தாயிரம் பேர் வரையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூவாயிரத்துக்கும் சற்று அதிகமானவர்களே வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.கச்சதீவுக்கு வருகை தந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன யாழ்ப்பாணம் அரச செயாலக அதிகாரிகளினாலும், நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகளினாலும் செய்யப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடுகளுக்கு கடற்படையினர் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இறுதி யுத்த நிகழ்வுகள் குறித்து பொறுப்பு கூறதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் இலங்கை அரசு மீது அதிகரித்திருக்கின்ற ஒரு சூழலில் தமிழக மக்கள் மத்தியில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசியல் ரீதியான ஒரு எழுச்சி காணப்பட்டுள்ள பின்னணியில் தமிழகத்திலிருந்து தாங்கள் எந்தவிதமான தடங்கலுமின்றி வந்திருந்ததாக தமிழகத்தில் இருந்து வந்திருந்தவர்களில் சிலர் தெரிவித்தனர்.
இந்திய இலங்கை மக்களிடையே இறுக்கமான ஓர் உறவின் அடையாளமாகத் திகழும் கச்சதீவின் விசேட பூஜை இன்று காலை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் கச்சதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேனானந்தா பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply