ஐநாவில் இலங்கை சிக்கலில் தள்ளப்பட்டால் முழு பொறுப்பையும் மஹிந்த அரசு ஏற்க வேண்டும் : ஐதேக

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் 22வது கூட்டத் தொடரில் இலங்கை சிக்கலுக்குள் தள்ளப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று  வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 22வது மாநாட்டில் இலங்கை சிக்கலுக்குள் தள்ளப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசும் கடந்த மனித உரிமை அமர்வில் சர்வதேசத்திற்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் ஏற்க வேண்டும்.

தற்போதைய தகவல்படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு வழங்கும் எனவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ´சர்வதேசத்தின் தேவைக்கேற்ப அவர்கள் முன்னிலையில் மண்டியிடும் நாடு இலங்கை அல்ல´ என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். உண்மையை மறைத்து மக்கள் மத்தியில் அரசு வீரப்பேச்சு பேசுவது தெளிவாகிறது.

உண்மை நிலையை அறிய பொது மக்களுக்கு உரிமை இருக்கிறது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என 2012ல் பிரேரணை முன்வைத்து அமெரிக்கா வலியுறுத்தியது. மஹிந்த சமரசிங்கவும் அறிக்கை பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். ஐநா கூட்டத்தில் ஜீ.எல்.பீரிஸும் இந்த வாக்குறுதியை அளித்தார்.

13வது திருத்தம், அமுல், வடக்கு தேர்தல் என்பவற்றை உடன் செயற்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தியது. எனினும் இலங்கை அதனை செய்யத் தவறியதால் இந்தியா இலங்கை மீது நம்பிக்கை இழந்துள்ளது. அதனால் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இந்தியாவுக்கு பொய் வாக்குறுதி அளித்த இந்த அரசு அதனை பொறுப்பேற்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்குமான விளைவுகளை ஒன்றும் அறியாத அப்பாவி நாட்டு மக்களே எதிர்கொள்வர்.இவ்வாறு திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply