அமெரிக்காவில் 2 போலீசார் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டையின்போது பயங்கரம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சாண்டா குரூஸ் பகுதியில் கற்பழிப்பு குற்றவாளி ஒருவனை வளைத்துப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்பகுதியில் உள்ள 5 குடியிருப்பு வளாகங்களை சீல் வைத்த போலீசார் வீடு வீடாக சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு துணையாக 3 போலீஸ் ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டு தேடுதல் வேட்டை நடத்தியது.அப்போது, சந்தேகத்திற்குரிய ஒருவன் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இச்சம்பவத்தில் 2 போலீசார் உடலில் குண்டுகள் துளைத்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அவர்களை கொன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வகுப்புகளில் இருந்த மாணவர்கள் அனைவரும் பள்ளி வாகனங்களில் ஏற்றி வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply