அமெரிக்கா கொண்டுவரும் புதிய தீர்மானத்திற்கு இலங்கை எதிர்ப்பு
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள புதிய தீர்மானத்திற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் இலங்கைக்கு பயன் அளிக்காது என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்துள்ளார்.வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர இருப்பதாக அமெரிக்க துணைத் தூதரக உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர் கூறியிருந்தார்.
2009-ம் ஆண்டு போரின்போது குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இலங்கை அரசு தவறி விட்டதாக கூறி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்தத் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. தற்போது புதிதாக அமெரிக்க கொண்டு வர உள்ள தீர்மானம் மூலம் இலங்கைக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply