இலங்கைக்கு எதிரான தீர்மானம்: விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் முக்கிய விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறினார்.மேலும் இந்த தீர்மானம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் திடமான பரிந்துரைகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமரசத்தை உருவாக்குவதற்காக கடந்தாண்டு கொண்டுவந்த தீர்மானத்தின் அடுத்தக்கட்டமாக, தற்போது புதிய தீர்மானத்தை தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.அதேநேரத்தில், மனித உரிமை ஆணையத்தில் எப்போது தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
இதனிடையே ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் , இலங்கைத் தமிழர் பிரச்னையில் உண்மையான உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை பலமுறை தாம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply