மாலியில் இயங்கி வந்த அல்-கொய்தா படைப்பிரிவின் தலைவன் சுட்டுக் கொலை
மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகள் அந்நாட்டின் அதிபர் ஆட்சிக்கு எதிராக பெரும் கலகத்தில் ஈடுபட்டனர். அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரஞ்சு படைகள் களமிறங்கின. சுமார் 7 வாரகாலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் மாலி படைப்பிரிவு தலைவன் அபு சயீத் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாடி அதிபர் இத்ரீஸ் டெபி இட்னோ நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட அபு சயீத் (46) என்பவனின் இயற்பெயர் முகம்மது கெடிர்.
லிபியா நாட்டின் எல்லைப்பகுதியான அல்ஜீரியாவில் பிறந்த இவன், ஆரம்ப காலத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தான். பின்னர், இஸ்லாமிய போராளி குழுவினருடன் ஏற்பட்ட தொடர்பினால் அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து மாலியில் இயங்கி வந்த அவ்வியக்கத்தின் படைத் தளபதியானான்.
மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கடத்தி, கொன்றுக் குவித்த இவன் கொல்லப்பட்டது வடக்கு மாலியில் பேராதிக்கம் செலுத்தி வந்த அல்-கொய்தாவுக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply