கூடங்குளத்தில் கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு புகார்
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 27ஆம் தேதியில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக இலங்கையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை இந்திய அதிகாரிகள் மறுத்தனர். இவை அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் என்றும் கூடங்குளத்தில் இருந்து கதிர்வீச்சு கசியவில்லை என்றும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விளக்கம் அளித்தது.
இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களுமே அணுக்கழிவுகளை நிர்வகிக்கும் திறன் படைத்தவை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த “கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கூடங்குளம் அணு உலையில் இருந்து பிப்ரவரி 27ஆம் தேதியில் இருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது. உண்மை நிலவரம் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். கதிர்வீச்சு அச்சுறுத்தல் விவகாரத்தில் பாராமுகமாக இருப்பதற்கு இலங்கை அரசே பொறுப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply