ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக மன்னாரில் பேரணி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை காலை மன்னாரில் பேரணி இடம்பெற்றது.மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.மன்னார் பிரதான வீதியிலிருந்து காலை 10.30 மணியளவில் பேரணி ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டோர் ஜனாதிபதியின் உருவப்படத்தை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் பஸ்தரிப்பிடத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவா குற்றவாளி, அபிவிருத்தியின் தலைவர் ஜனாதிபதி, ஐ.நா பிரேரணையை நிறைவேற்றாதே என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply