இந்திய மீனவர்கள் 19 பேர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுளைந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன் கிழமை மாலை தலைமன்னார் கடற்கரையில் இருந்து சுமார் 09 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவில் 4 இழுவைப்படகுகளில் 19 இந்திய மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

பின் மேலதிக விசாரனைக்காக கடற்படையினர்   தலைமன்னார் காவல்துறையினரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply