இந்திய குழுவினர் இன்று இலங்கையில்

இந்திய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (08) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறது.  இரு நாட்டுகளிற்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்திய பாராளுமன்ற குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்பின்னர் நாளை (09) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மெற்கொள்ளவுள்ளனர்.

அங்கு இந்திய உதவியுன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடவுள்ளனர்.

இலங்கை வரும் குழுவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply