மாத்தளை மனித புதைகுழி சம்பவத்துடன் கோதபாயவை தொடர்புபடுத்த முயற்சி

மாத்தளை மனித புதைகுழி சம்பவத்துடன் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை தொடர்புபடுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் திடீரென மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சடலங்கள் புதைக்கப்பட்ட காலப்பகுதியில் மாத்தளையின் இணைப்பு அதிகாரியாக கோதபாய ராஜபக்ஷ கடமையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளான கமால் குணரட்ன, சவேந்திரா சில்வா போன்றோரும் மாத்தளையில் கடமையாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மாத்தளையின் இணைப்பு அதிகாரியாக கடமையாற்றிய காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் இவ்வாறு திடிரென கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்தின் மீது ஒரு விரலை சுட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களையே சுட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply