ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப செயற்பட முடியாது – இலங்கை திட்டவட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று மீளவும் வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட விடயங்களையிட்டு யாருடனும் பேசும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என்று கூறினார்.

‘ இலங்கையால் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வருடம் செப்டம்பரில் நடைபெறும் 24 ஆவது அமர்வில் இலங்கைப்பற்றி வாய்மொழியாகவும் 2014 இல் 25 ஆவது அமர்வில் முழுமையாகவும் அறிக்கை வழங்கப்படவேண்டுமென இந்த தீர்மானம் கூறுகின்றது. இதற்கமைய ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைபற்றி ஆறுமாதத்திற்கு ஒருதடவை பேசப்படும்.

உலக நிலையையை கவனிக்கும்போது இலங்கை பிரச்சினையுள்ள நாடல்ல. இந்த தீர்மானத்தின் இலங்கை பற்றிய தேவையில்லாத அக்கறை ஏற்புடையதல்ல. எனவே, இந்த தீர்மானத்தை ஏற்கமுடியாது என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

இந்த தீர்மானம் தருஸ்மன் அறிக்கையென கூறப்படும் நிபுணர்கள் அறிக்கைளையும் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையையும் கருத்தி எடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சர்வதேச விசாரணைத்தேவையென கூறியதை நாம் நிராகரிக்கின்றோம் என அவர் கூறினார். இந்த தீர்மானம் கருத்து போதலுக்கும் வன்முறைக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது எனவும் அது இப்போது கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்கும் பரவியுள்ளது என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply