இலங்கை பொருளாதார செயல்பாடு திருப்தி அளிக்கிறது: இந்திய குழு

இலங்கையில் பொருளாதார செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:செüகதா ராய், பிரகாஷ் ஜவடேகர், அனுராக் தாகுர், சந்தீப் தீக்ஷித், தனஞ்செய சிங் மற்றும் மது கெüட் யாஸ்கி உள்ளிட்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், இந்திய மக்கள் காங்கிஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இக்குழுவினர், இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபட்சவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் திருப்தி அளிப்பதாக இக் குழுவினர் தெரிவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்தும் வகையில், இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பணிகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து, இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், இரு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உறவை மேம்படுத்துவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply