கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டத்தை தணிக்க சீனா – ஜப்பானுடன் அமெரிக்கா ஆலோசனை
அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது வடகொரியா போர் பிரகடனம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது.
தென்கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள ராணுவ தளங்களை தாக்கும் வகையில் வடகொரியா அணு ஆயுதங்களை நிலை நிறுத்தி தயார் நிலையில் வைத்துள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெறலாம் என்ற சூழ்நிலை உள்ளது. ஆகவே, போர் பதட்டத்தை தணிக்கும்படி அமெரிக்காவை சர்வதேச நாடுகள் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று கொரிய தீபகற்பத்தில் போரை தவிர்க்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
வடகொரியா சீனாவின் நட்பு நாடாகும். எனவே, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி நேற்று அவசரமாக பெய்ஜிங் (சீனா) சென்றார். அங்கு சீனா வெளியுறவு மந்திரி யங் ஜியெசியை சந்தித்து பேசினார். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூண்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
எனவே, அங்கு போர் மூளாமல் தடுக்க வட கொரியாவுடன் சீனா பேச வேண்டும். அதற்காக அணு ஆயுத பரவல் சட்டத்தில் வடகொரியாவை கையெழுத்திட செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து சீனா எடுத்த நடவடிக்கைகளை அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரியிடம் எடுத்துக் கூறினார்.
பின்னர் இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டி அளிக்கும் போது, கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.
சீனாவில் பயணத்தை முடித்துக்கொண்ட ஜான் கெர்ரி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றார். அந்நாட்டு வெளியுறவு மந்திரி இட்சுனோரி ஒனோ தேராவை சந்தித்து பேசுகிறார்.
ஏனெனில், அமெரிக்காவின் ராணுவ தளம் ஜப்பானின் குயாம் தீவில் உள்ளது. எனவே, தங்கள் நாட்டின் மீது வடகொரியா தாக்குதல் நடத்தகூடும் என கருதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏவுகணை தடுப்பு கருவிகளை நிலை நிறுத்தி 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply