வட கொரியாவோடு பேச்சுவார்த்தைக்கு தயார்:அமெரிக்கா அறிவிப்பு
வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், வடகொரியா சர்வதேச சமூகத்திற்கு ஏற்கெனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.டோக்யோவில் ஜப்பான் பிரதமருடனான சந்திப்பிற்கு பின் பேசிய கெர்ரி, வடகொரியா விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வடகொரியா நடத்தி வரும் அணு ஆயதங்கள் சோதனையானது அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது, அந்நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தல் தரும் விஷயமாகும் என்றும் தெரிவித்துள்ளார் கெர்ரி.
உலகில் எங்கும் போர் என்பதே கூடாது என்பதே அனைத்து நாடுகளின் விருப்பமும். எனவே இந்த விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply