சீனாவில் பூகம்ப பலி 195 ஆக உயர்வு: 10,500 பேர் காயம்
சீனாவின் தென் மேற்கேயுள்ள சிச்சவான் மாகாணத்தில் யாயன் நகருக்கு அருகே நேற்று காலை
ஏற்பட்டது. 7 ரிக்டரில் பதிவான பூகம்பத்தால் ஜஷான் மற்றும் யாயன் நகரங்களும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் சுமார் 20 வினாடிகள் குலுங்கின. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின. தொழிற் சாலைகளில் பணியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.பூகம்பத்தில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் ரோடுகளை வழிமறித்து கட்டிட இடிபாடுகள் கிடந்ததால் அவர்களால் விரைவாக வந்துசேர முடியவில்லை.
எனவே பலர் இடிபாடுகளுக்குள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். தொடக்கத்தில் 156 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அகற்றப்பட்ட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் சாவு எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக காயம் அடைந்த 6 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இடிபாடுகளில் சிக்கி கிடந்த பலர் மீட்கப்பட்டுள்ளதால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 10,500 ஆகியுள்ளது.
இதற்கிடையே பூகம்ப பகுதிக்கு பிரதமர் லீ கெகுயாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply