பெண்கள் பாதுகாப்பு- கண்காணிப்பு ;முழுக்கவனம் ; பிரதமர் உறுதி

நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், கண்காணிப்பும் முக்கியத்துவம் அளிக்கப்படும், இது முழுக்கவனத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இன்று கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான விருது வழங்கும் விழா இன்று டில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. விழாவில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு விருது வழங்கி பிரதமர் பேசுகையில்:நாட்டில் அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம் பேணிக்காத்திடும் விதமாக அதிகாரிகள் உழைத்திட வேண்டும். நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு நாம் உத்தரவாதம் அளித்திட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு விஷயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. மாணவி கற்பழிப்பு சிறுமி பலாத்காரம் போன்றவை நமக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சமீபத்திய குழந்தை பலாத்காரம் சம்பவம் சமூகத்தில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும். பெண்களின் அதிகாரம் மற்றும் அவர்களின் பங்களிப்பிற்கு நாம் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் தொடர்புடைய முக்கிய , கவலை தரும் விஷயத்தில் வெளிப்படையான நிலையை பின்பற்ற வேண்டும். ஊழலை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply