பொருளாதார வீழ்ச்சி: தீவுகள்-அரண்மனைகளை விற்கும் கிரீஸ் நாடு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் தற்போது பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, அதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அரசின் சொத்துக்கள் விற்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான அழகிய கடற்கரைகள், தீவுகள் மற்றும் அரண்மனைகள் போன்றவை தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.அவற்றில் முக்கியமானது ரோதெஸ் தீவு ஆகும். அது 50 மைல் நீளமானது. 1850 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சுற்றுலாதலமாகும். அங்கு அழகிய அபாண்டோ கடற்கரை உள்ளது. கிரேக்கர்களின் சூரிய கடவுளான அப்போலோவின் கோவிலும் உள்ளது. பழங்காலத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான 100 அடி உயர கொலோங்கல் சிலையும் உள்ளது.

இவை தவிர இங்கிலாந்து இளவரசர் பிலிப் பிறந்து வளர்ந்த அரண்மனையும் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதற்கு முன்பு மார்ச் மாதம் கத்தார் அரசர் இங்குள்ள 6 இடங்களை ரூ.3,850 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். ரஷியாவின் எண்ணை நிறுவனமும் பல இடங்களை விலைக்கு வாங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply