தமிழ் மக்களை போன்று முஸ்லிம்களை வேட்டையாட முனைந்தால் அது பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்: அசாத்சாலி

தமிழ் மக்களை வேட்டையாடியது போன்று முஸ்லிம் மக்களை வேட்டையாட முனைந்தால் அது பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி அரசாங்கத்திற்கும் பொதுபல சேனாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வட, கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அல்கொய்தா இயக்கம் இல்லை. எனவே தேவையற்ற பிரச்சினையை முஸ்லிம் மக்கள் மீது சுமத்த வேண்டாம்.

தமிழர்களை வேட்டையாடுவதை நிறுத்தியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வேட்டையை ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு எதிராக வேட்டை ஆரம்பமானால் அது மாறுபட்டதாகவே அமையும். அதன் பின் விளைவுகளும் பாரதூரமானதாகவே இருக்கும் என்பதை அரசாங்கத்திற்கும் பொதுபலசேனாவிற்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply