ஆப்கனில் பூகம்பம் : 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில், ஏழு பேர் பலியாயினர்.
ஈரானில் கடந்த வாரம் பூகம்பம் ஏற்பட்டதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின், சில பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து, பலர் பலியாயினர். இதற்கிடையே, நேற்று ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பூகம்பம் தாக்கியது. இதில், நங்கார் மற்றும் குனார் மாகாணங்களில் பல வீடுகள் சேதமடைந்தன. குழந்தைகள் உட்பட, ஏழு பேர் இந்த பூகம்பத்தில் பலியாயினர். 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply