வங்கதேச கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150ஐ தாண்டியது
வங்கதேசத்தில் புதனன்று கட்டிடம் இடிந்ததில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐயும் தாண்டி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இரவோடிரவாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆடைத்தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் பரிமாறப்பட்டதுடன், வெளிச்ச விளக்குகளும் போடப்பட்டன. இதுவரை இடிபாடுகளில் இருந்து 2000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள சில்லறைத் துணிக்கடைகளில் சகாய விலையிலான ஆடைகளை தயாரிக்கும் பல தொழிலகங்கள் அந்த கட்டிடத்தில் செயற்பட்டு வந்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply