பாஸ்டன் நகரில் தாக்குதல் நடத்திய சகோதரர்கள் நியூ யார்க்கை தகர்க்கவும் திட்டமிட்டிருந்தனர்

பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2 சக்தி வாய்ந்த குக்கர் குண்டுகள் வெடித்தன.இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். சுமார் 180 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் கை, கால்களை அகற்றிய பின்னரே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.குண்டு வெடித்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகத்திற்குரிய இரு நபர்களை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் ஒருவன் போலீசாரின் தேடுதல் வேட்டையின்போது பலியானான். அவனது தம்பி என்பவனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் கண்டையில் படுகாயமடைந்த அவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். சிகிச்சை முடிந்து நேற்று சிறையில் அடைக்கப்பட்டான்.

ஆஸ்பத்திரியில் இருந்த போது போலீசாரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்த அவன், ‘வீட்டில் இருந்த மேலும் சில குக்கர் வெடிகுண்டுகளை வைத்து நியூ யார்க் நகரை தகர்க்க நானும் எனது அண்ணனும் திட்டமிட்டிருந்தோம்’ என்று கூறியுள்ளான்.

நியூ யார்க்கின் பரபரப்பு மிக்க டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் அவன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply