ஆப்கானிஸ்தான்: டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 45 பயணிகள் பலி
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம், மைவாண்ட் மாவட்டத்தில் நேற்று பயணிகள் பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த பஸ்சில் ‘அறுவடை திருநாள்’ நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயணம் செய்தனர்.
ஹேமந்த் மாகாணத்தை கடந்த போது சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது பயங்கர சத்தத்துடன் பஸ் மோதியது.இந்த விபத்தில் சிக்கி 45 பேர் பலியாகினர்.
சில தினங்களுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகளால் வழிமறித்து தீ வைத்து எரிக்கப்பட்ட டேங்கர் லாரியின் மீது பஸ் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என கந்தகார் மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply