சீனாவில் தொடர் மழைக்கு 55 பேர் பலி
சீனாவில் பெய்துவரும் தொடர் மழைக்கு 55 பேர் பலியாகியுள்ளனர். தென் சீனாவில் கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குவாங்சு பகுதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் சுமார் 6 1/2 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஆறுகளில் அபாயக் கோட்டை கடந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பீஜிங் ஆற்றில் கடந்த நூறாண்டு காலமாக இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீஜிங் ஆற்றின் கரையோரம் உள்ள 2 ஆயிரத்து 675 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
சீனாவுக்கான உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 9 மாகாணங்களில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதில் குவாங்டாங் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காணாமல் போய் உள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்யும். இதன் விளைவாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்படலாம் என குவாங்டாங் மாகாண வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply