இன்னும் 96 சதுர கிலோ மீற்றர் நிலத்தில் மட்டுமே கண்ணிவெடிகள்

வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பும்- கிழக்கில் 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பும் வடமத்திய மாகாணத்தில் 3 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பும் மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றும் பிரதேசங்களாக எஞ்சியுள்ளன. யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கையின் மூலம் இதுவரை வடக்கில் 1345 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலிருந்தும் கிழக்கில் 623 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலிருந்தும் கண்ணிவெடிகள் மீட்டெடுக் கப்பட்டுள்ளன இராணுவ பேச்சாளர் நிரோஷன் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இதுவரை காலம் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள்- மிதிவெடிகள்- யுத்த தாங்கி அழிப்பு வெடிகள் மற்றும் பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யின் போது உயிரிழப்பு சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் இதற்கமைய 2064 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன்- 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்துடன் ஐ. நா. மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.

இராணுவத்துடன் இணைந்து பல தொண்டர் அமைப்புகள் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply