செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னாரில் வைத்து இன்று மாலை 4 மணியளவில் இவர்கள் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply