ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து ஒருபோதும் வெளியேறாது!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசிலிருந்து வெளியேறாது. முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற யார் சதி செய்கிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் புகட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை வைத்துள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கைத்தொழில், அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் அல்நஹ்ல் இளைஞர் கழகம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய இளைஞர் கலை, கலாசார விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஏறாவூர் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.
சுபைர்இ விசேட அதிதிகளாக ஏறாவூர் நகரபிதா அலிசாஹிர் மெளலானா, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். மொஹமட் ஹனீபாஇ தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.என்.எம். நைறூஸ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை அதிகாரி ஜே. கலாராணி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அபுல் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது நேர காலத்தோடு முடிவுகளை எடுக்கும் ஒரு அரசியல் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், அப்படியான அரசியல் திருத்தங்கள் வந்து மாகாண சபையினுடைய அரசியல் அதிகாரத்தைக் குறைக்கின்ற அல்லது முஸ்லிம்களுடைய அரசியல் அதிகாரத்துக்கு ஒரு களங்கம் விளைவிக்கின்ற எந்த ஒரு அரசியல் தீர்வு வருமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக அந்த அரசியல் தீர்வுக்கு ஆதரவு அளிக்காது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவுகளை கடைசி நிமிடம் வரைக்கும் நன்கு பரிசீலித்துப் பார்த்து விட்டு சரியான முடிவுகளையும், தீர்ப்புக்களையும் சரியான நேரத்தில் வெளியிடும் என தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply