நம்மை நாமே அழிக்கும் வகையில் ஒற்றுமை குலைந்து வருகிறது – கருணாநிதி

நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை அடைகிறேன்” என தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க.இவில் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என, பல அணிகள் இருக்கின்றன. அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அதே நேரத்தில், ஊருக்கு ஊர் உருவாகும் அணிகள் ஒழிய வேண்டும் என்பது தான், நான் வெளியிடுகிற செய்தியாக இருக்க முடியும்.

இங்கே பேசும்போது, ஒரு குரல் எழுந்தது. அந்தக் குரலையொட்டி, வேறு சிலர் மறுப்புக் குரல் தெரிவித்தனர்; பின் அக்குரல் அடங்கிற்று. ஏன் அந்தக் குரல் எழுந்தது. அதற்கு மறுப்பாக இன்னொரு குரல் எழக்காரணம் என்னவென்றால், அணிகள் தான்.யாரோ ஒரு நண்பர் அணிகளைப் பற்றி இங்கே பேசும்போது, ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, ‘அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேசத் தேவையில்லை. ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தரும் வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றிப் பேசினால் போதும்’ என்றார்.

கட்சிக்கு பிணிகள்:ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.இவின் அரசியலில், அவர் இன்னும் உணராதவர். உணர்ந்தவன் என்ற காரணத்தால், இந்த அணிகள் பெருகினால், இவை அணிகளாக இருக்காது. கட்சிக்கு பிணிகளாக ஆகிவிடும்.
இந்த அணிகளை, இப்பொழுதே நாம் திருத்திக் கொள்ள வேண்டும். நம்மை வேறு பகைவர் வந்து அழிக்கா விட்டாலும், நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணி பார்க்கும் போது வேதனை அடைகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply